Suzhal 2 : நெக்ஸ்ட் சம்பவம் லோடிங்; அதகளமாக ரிலீஸ் ஆன சுழல் 2 டிரைலர்

புஷ்கர் - காயத்ரி எழுதியுள்ள சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.

Ganesh A  | Published: Feb 19, 2025, 12:20 PM IST

பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி ஓடிடியில் சக்கைப்போடு போட்ட வெப் தொடர் தான் சுழல். இந்த வெப் தொடரின் கதையை புஷ்கர் - காயத்ரி எழுதி தயாரித்து இருந்தனர். அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், சுழல் 2 வெப் தொடரின் விறுவிறுப்பான டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.

முதல் பாகத்தை போலவே இந்த சீசனும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. இந்த வெப் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவர்களுடன் மஞ்சிமா மோகன், கெளரி கிஷான், லால், கயல் சந்திரன், மோனிஷா பிளெசி, சரவணன், சாந்தினி தமிழரசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சுழல் தி வொர்டெக்ஸ் வெப் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற பிப்ரவரி 28ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்த வெப் தொடருக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். மேலும் ஆபிரஹாம் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த வெப் தொடரில் படத்தொகுப்பாளராக ரிச்சர்டு கெவின் பணியாற்றி உள்ளார். இந்த வெப் தொடரின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More...

Video Top Stories