மனதை வருடும் உணர்வோடு 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் இருந்து வெளியான சுத்தமுள்ள நெஞ்சம் லிரிக்கல் பாடல்!

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள, 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் இருந்து சுத்தமுள்ள நெஞ்சம் என்கிற, லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இயக்குனர் தங்கர்பச்சான் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இயக்கியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சுத்தமுள்ள நெஞ்சம் என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதை வருடியுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையில் அவருடைய மனைவியும், பின்னணி பாடகியுமான சைந்தவி இந்த பாடலை பாடியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கியுள்ள இந்த படத்தில், பாரதிராஜா கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அதிதி பாலன், கௌதம் வாசு தேவ் மேனன், யோகி பாபு, சாரல், எஸ் ஏ சந்திரசேகர், டெல்லி கணேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

என் கே ஈகாம்பரம் ஒளிப்பதிவில், பி லெனின் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். இயக்குனராக மைக்கல் பணியாற்றி உள்ளார். இந்த படத்தை விஏஓ மீடியா எண்டெர்டெயின்மெண்ட் சார்பில், துரை வீரா சக்தி என்பவர் தயாரித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள இந்த மெலடி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video