90-ஸ் கல்ச்சரை அசிங்கப்படுத்தாதீங்க - 2கே லவ் ஸ்டோரி படத்தின் கலகலப்பான ட்ரைலர் வெளியானது!
2கே கிட்ஸ் காதலை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக வெளியாகியுள்ளது இந்த படத்தின் ட்ரைலர்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், ஜெகவீர நடிப்பில் ரிலீஸ் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் 2கே கிட்ஸ் லவ் ஸ்டோரி. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்றைய இளைய தலைமுறையின் காதல் மற்றும் அவர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது என்பதின் பிரதிபலிப்பே இந்த திரைப்படம். தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இதோ.