கங்குவா ட்ரைலர் விமர்சனம்: சூர்யா ரசிகர்கள் சொல்வது என்ன?

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்டமான காட்சிகள், சூர்யாவின் நடிப்பு, தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை என அனைத்தும் இணைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Share this Video

வீரம், வேதாளம், விஸ்வாசம் என கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சிவா. இதுவரை கமர்ஷியல் படங்களை மட்டும் இயக்கி வந்த சிவா, தற்போது முதன்முறையாக பேண்டஸி கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகிவுள்ளது. இது குறித்து மக்கள் சொல்லும் விமர்சனம் என்ன என்பதை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம். கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் அண்மையில் வெளிவந்த ஃபயர் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. பிரம்மிப்பூட்டும் காட்சிகளுடன், பாகுபலிக்கே சவால் விடும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கி இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் சூர்யாவின் நடிப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் மெர்சலாக இருப்பதாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

Related Video