கௌதமி மேம் தான் சூர்யாவின் க்ரஷ்; பாலய்யாவிடம் அண்ணனை மாட்டிவிட்ட கார்த்தி - Viral Video!

Suriya and Karthi : பிரபல நடிகர் சூர்யா தன்னுடைய கங்குவா திரைப்பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் பாலய்யா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

Ansgar R  | Published: Nov 8, 2024, 11:54 PM IST

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கண்டிராத ஒரு புதிய கதைகளத்தில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கிறார். "கங்குவா" என்கின்ற இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் விறுவிறுப்பாக படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், தெலுங்கு மொழியில் பாலய்யா நடத்தி வரும் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருக்கிறார் நடிகர் சூர்யா. அப்போது சூர்யாவின் தம்பி கார்த்தியிடம், அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாலய்யா "உங்கள் அண்ணனின் இளமைக்கால க்ரஷ் யார் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்க. 

அதற்கு பதில் அளித்த கார்த்தி "அவருக்கு நடிகைகள் என்றாலே ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக சிக்கு புக்கு ரயிலே பாடலில் வரும் கௌதமியை மிகவும்" பிடிக்கும் என்று சொன்னதும். இன்று இது தான் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி என்று கூறி சூர்யாவை பாலய்யா கிண்டல் அடித்தார். உடனடியாக அருகில் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, "டேய் நீ கத்திடா, கார்த்தி இல்ல" என்று கூறி அவரை கலாய்த்துள்ளார். 

Read More...

Video Top Stories