ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் மகன் திருமணம்... பட்டு வேட்டி சட்டையில் கெத்தாக வந்து வாழ்த்திய ரஜினிகாந்த்

ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் - நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக் அம்பரீஷ் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Share this Video

ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் - நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக் அம்பரீஷ் திருமணம் இன்று (ஜூன் 5) பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் அவிவா பிடாபா என்பவரை அபிஷேக் அம்பரீஷ் திருமணம் செய்துகொண்டார். அபிஷேக் மற்றும் அவிவா ஜோடியின் திருமணம் இன்று காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை பெங்களூரில் உள்ள சாம்ரவஜ்ரா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. 

அபிஷேக் அம்பரீஷ் தனது நீண்ட நாள் காதலியான அவிவாவை கவுடா பாரம்பரியப்படி திருமணம் செய்துகொண்டார். அபியின் திருமணத்தில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Related Video