"கங்குவா எனக்காக எழுதப்பட்ட கதை" இசை வெளியீட்டு விழாவில் சிவாவை மாட்டிவிட்ட ரஜினி!
Kanguva Audio Launch : இன்று கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பல பிரபலங்கள் பங்கேற்று பேசியுள்ளனர்.
கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழ் மொழியில் உள்ள நடிகர் சூர்யாவின் குரலையே, 38 மொழிகளுக்கும் ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் டப்பிங் செய்யப்பட்டு இருப்பது இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறி இருக்கும் கங்குவாவின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நேரிலும், வீடியோ வழியாகவும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கங்குவா திரைப்படத்தை வாழ்த்தி ஒரு வாழ்த்து செய்தியை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பேச தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
அண்ணாத்த படத்தின் போதே இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் தனக்கு ஒரு ஹிஸ்டாரிக்கல் சப்ஜெக்ட் எழுதுமாறு கேட்டுக் கொண்டதாக கூறியிருக்கிறார். ஆகவே கங்குவா, சிறுத்தை சிவா எனக்காக எழுதிய கதை என்று நினைக்கிறேன். அதன் பிறகு ஞானவேல் ராஜாவிற்கு இந்த கதை பிடித்துபோக, தற்பொழுது இந்த கதையை சூர்யாவை வைத்து இயக்கி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் உருவானதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
நடிகர் சிவகுமார் திரை உலகில் மிகச்சிறந்த மனிதராக வலம் வந்தவர். ஆகவே புலிக்கு பிறந்தது பூனையாகாது. சூர்யா மிகச்சிறந்த நடிகர் அவருடைய கங்குவா திரைப்படம் வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.