மணமகனோடு செம டான்ஸ்.. திருமண வீட்டை கலகலப்பாக்கி மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - Viral Video!

Rajinikanth Dance in Anant Ambani Wedding : ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாஸ் டான்ஸ் ஆடி அனைவரையும் அசத்தியுள்ளார்.

Share this Video

மும்பையில் உள்ள பிரபலமான இடத்தில், தற்பொழுது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகவும் ஜோராக நடந்து வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இதில் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது குடும்பத்தோடு இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளார். 

இந்நிலையில் இதுவரை யாரும் கண்டிராத ஒரு காட்சி, தற்பொழுது ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் அரங்கேறியுள்ளது என்றே கூறலாம். மணமக்களை வாழ்த்த சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணமகன் ஆனந்த் அம்பானியோடு இணைந்து, கிளாசிக் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ஜாலியாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் இப்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி என்கின்ற திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சுருதிஹாசன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Video