Rajini : ஆனந்த் அம்பானி கல்யாணம்.. மனைவி மற்றும் மகளோடு மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த் - வைரல் வீடியோ!

Super Star Rajinikanth : இன்று மும்பையில் நடைபெறும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் பங்கேற்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Share this Video

கடந்த ஆண்டு ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் ஆனந்த் அம்பானி ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், கடந்த பல மாதங்களாகவே இவர்களுடைய திருமணத்திற்கு முன்னதான சடங்குகள் வெகு பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு அரங்கில் தற்பொழுது ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்டின் திருமணம் கோலாகலமாக நடந்து வருகிறது. நாளை "ஆசிர்வாத்" நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ஜூலை 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் இதேபோல பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

வெளிநாடுகளில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் பல முக்கிய பிரபலங்கள் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்று வரும் நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது இளைய மகள் மற்றும் தனது மனைவியோடு நேரில் சென்று தம்பதிகளை வாழ்த்தியிருக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Related Video