முதல் படத்திலேயே நடிப்பில்... நயனுக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி! வெளியான லைசென்ஸ் ட்ரைலர்!

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி கதையின் நாயகியாக நடித்துள்ள 'லைசென்ஸ்' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

manimegalai a  | Published: May 29, 2023, 8:43 PM IST

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடல்களை பாடி மிகவும் பிரபலமான கணவன் ஜோடி செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி. செந்தில் கணேஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில், இவரைத் தொடர்ந்து தற்போது ராஜலட்சுமியும் நடிப்பில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஏற்கனவே பின்னணி பாடகியான,  ராஜலட்சுமி தற்போது நயன்தாராவுக்கே டப் கொடுக்கும் நடிப்பில், 'லைசென்ஸ்' படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தை ஜீவானந்தம் என்பவர் தயாரித்துள்ளார். கணபதி பாலமுருகன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஷ்ணு ஜாக்கோப் என்பவர் இசையமைத்துள்ளார். வெரோனிகா பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்தில் டத்தோ ராதாரவி, அயலி வெப் சீரிஸ் பிரபலமான, அபி நட்சத்திரா, தன்யா, அனன்யா,  பழ கருப்பையா, விஜய் பாரத், அஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.  தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக ஒரு சாதாரண ஆசிரியை, துப்பாக்கிக்கு லைசன்ஸ் கேட்டு விண்ணப்பிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் எழும் விவாதங்களே இந்த படம் என்பதை என்பதும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதும் ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

ராஜலட்சுமி நடிப்பை, நயன்தாராவுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Read More...

Video Top Stories