விஷால் - சிம்புவுக்கே கல்யாணம் ஆகிடுமா? முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள 'காபி வித் காதல்' ட்ரைலர் இதோ..!
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் 'காபி வித் காதல்' அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் திரைப்படங்களை இயக்கம் சுந்தர்.சி தற்போது மல்டி ஸ்டார் படமாக 'காபி வித் காதல்' படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக நடிகர் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று பேர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அமிர்தா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா ஆகியோரும், முக்கிய கதாபாத்திரத்தில் டிடி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பட்டாடை அவ்னி சினிமாக்ஸ் - குஷ்பூ சுந்தர் & பென்ஸ் மீடியா - ஏசிஎஸ் அருண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்... இந்த படத்தின் கலர் ஃபுல் ட்ரைலர் வெளியாகியுள்ளது.