சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக மிரட்டும் 'வல்லான்' ட்ரைலர் வெளியானது.!

சுந்தர் சி நடிப்பில், உருவாகியிருக்கும் 'வல்லான்' படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

திரைப்படம் இயக்குவதில், ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, இவர் நடிப்பில் வெளியான 'தலைநகரம் 2' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, விரைவில் இவர் நடித்துள்ள 'வல்லான்' திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை, இயக்குனர் வி ஆர் மணி செய்யோன் இயக்கி உள்ளார். சுந்தர் சி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஹெபா பட்டேல், அமித் பார்கவ். உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சுந்தர் சி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதை, விறுவிறுப்பான கதைக்களத்துடன் திரில்லர் ஜர்னரில் இயக்கியுள்ளார் இயக்குனர்.

'வல்லான்' படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, டாக்டர் பி ஆர் மணிகண் ராமன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video