Asianet News TamilAsianet News Tamil

Watch: 'பத்து தல' சிம்பு கெட்டப்பில்.. சைலண்டான கேங் ஸ்டாராக சுந்தர் சி! 'தலைநகரம் 2' ஸ்னீக் பீக் வீடியோ!

சுந்தர்.சி நடிப்பில் ஜூன் 23 ஆம் தேதி 'தலைநகரம் 2' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி மிரள வைத்துள்ளது.
 

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், 'தலைநகரம்' படத்தின் முதல் பாகம் வெளியாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சுந்தர் சி இரண்டாம் பாகத்திலும் கேங் ஸ்டார் வேடத்தில் நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் பேண்ட் - ஷிர்டில்  ஸ்டைலிஷ் கேங்ஸ்டாராக நடித்திருந்த சுந்தர் சி இரண்டாம் பாகத்தில் கருப்பு வேஷ்டி, கருப்பு சட்டை என மிரட்டல் ஆன லுக்கில் உள்ளார். பத்து தல படத்தில் சிம்புவின் கெட்டப்பை பார்த்தது போலவே இருக்கிறது என சில நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வந்தாலும், 'பத்து தல'  சிம்பு போல் அதிரடி கேங் ஸ்டாராக இல்லாமல், சுந்தர் சி மிகவும் சைலன்டான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளது, இந்த ஸ்பீக் பீக் வீடியோ மூலம் தெரிகிறது.

'தலைநகரம் 2' படத்தை இயக்குனர் துரை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரன் இசையமைக்க, சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, டான் அசோக் ஸ்டண்ட் காட்சிகள் வடிவமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சுந்தர்சிக்க ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories