சிம்பு மீது அவதூறு பரப்பிய ப்ளூ சட்டை மாறன்! செருப்பு மாலை அனுவித்து புதுவை STR ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பு!
நடிகர் சிலம்பரசன் மீது அவதூறு பரப்பும் விதமாக, விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனை கண்டித்து புதுச்சேரியில் எஸ்டிஆர் தலைமை ரசிகர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' பலரின் பாசிட்டிவ் விமர்சனங்களோடு... திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். ஒரு படத்தின் நிறை குறைகளை கூறுவது தவறில்லை,
செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார் இந்நிலையில் இதனை கண்டித்து சிலம்பரசன் ரசிகர்கள் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுவை மாநில எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாநிலத் தலைவர் பாபு தலைமையில் ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் மன்ற ஆலோசகர் அசோக் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்...