தென்னக சினிமாவின் ரியல் குயின்; "சில்க்" ஸ்மிதாவின் பிறந்தநாளில் வெளியான பயோ பிக் அப்டேட்!

Silk Smitha Bio Pic : கடந்த 1960ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி பிறந்தவர் தான் பிரபல நடிகர் சில்க் ஸ்மிதா. இன்னும் விடை தெரியா மரணங்களில் இவருடைய மரணமும் ஒன்று.

First Published Dec 2, 2024, 4:31 PM IST | Last Updated Dec 2, 2024, 4:41 PM IST

இந்திய திரையுலகில் 17 ஆண்டுகளில், மொத்தம் 5 மொழிகளில் 470க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்று பலரும் ரசிக்கப்படும் நடிகை தான் "சில்க்" ஸ்மிதா. கடந்த 1960ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி ஆந்திராவில் பிறந்த பிறந்த பெண் அவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் 17 ஆண்டுகள் கொடிகட்டி பரந்த நாயகி. கடந்த 1996ம் ஆண்டு சென்னையில் இவர் காலமானார். இன்றளவும் இவருடைய இறப்பு மர்மமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயராம் என்பருடைய இயக்கத்தில் சில்க் ஸ்மிதாவின் பயோ பிக் உருவாகியுள்ளது. பிரபல நடிகை சந்திரிகா ரவி இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்துள்ளார். இன்று அப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

Video Top Stories