Asianet News TamilAsianet News Tamil

Garudan: ரொமான்டிக் ஹீரோவாக மாறிய சூரி..! கருடன் படத்தில் இருந்து வெளியான 'பஞ்சவர்ண கிளியே' வீடியோ பாடல்!

நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் படத்தில் இருந்து பஞ்சவர்ண கிளியே என்கிற காதல் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
 

First Published Feb 9, 2024, 7:12 PM IST | Last Updated Feb 9, 2024, 7:12 PM IST

விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள சூரி, தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே கொட்டு காளி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இதை தொடர்ந்து 'கருடன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து, சூரியின் ரொமான்டிக் பாடலான 'பஞ்சவர்ணக்கிளியே' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் 'கருடன்' படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க, சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக சூரி அவதாரம் எடுத்துள்ள நிலையில், இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ரேவதி ஷர்மா என்பவர் நடித்துள்ளார்.

விரைவில் ரிலீசுக்கு தயாராகியுள்ள இந்த படத்தில் இருந்து... ரொமான்டிக் பாடலான 'பஞ்சவர்ண கிளியே' பாடல் வெளியாகியுள்ளது. 

Video Top Stories