Asianet News TamilAsianet News Tamil

Suro Suro Song: சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தில் இருந்து வெளியான 'சுரோ சுரோ'.. ரொமான்டிக் லிரிகள் பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள, 'சுரோ சுரோ' லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.
 

First Published Jan 7, 2024, 5:40 PM IST | Last Updated Jan 7, 2024, 5:40 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த ஆண்டு 'மாவீரன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்தாலும், ஒரு சில காரணங்களால்... இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

இதை தொடர்ந்து, தற்போது சிவா நடித்து... பல வருடங்களாக வெளியாகாமல் கிடப்பில் போட்டுட்ட அயலான் திரைப்படம் ஒரு வழியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். 

இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பக்காவான சி.ஜி.வேலைப்பாடுகளுடன்... ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படதம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'சுரோ சுரோ' என்கிற பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ராகுமான் இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல், ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்துள்ளது.


 

Video Top Stories