சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் இருந்து வா வீரா லிரிகள் பாடல் வெளியானது! வீடியோ..

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள்ள 'மாவீரன்' படத்தில் இருந்து தற்போது மூன்றாவது சிங்கிள் பாடலான வா வீரா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Jul 7, 2023, 7:27 PM IST | Last Updated Jul 7, 2023, 7:27 PM IST

சிவகார்த்திகேயன் முதல் முறையாக, இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கை கோர்த்துள்ள திரைப்படம், 'மாவீரன்'. இதுவரை ஏற்று நடித்திராத கதாபாத்திரத்தில் சிவா நடித்திருக்கும் இந்த திரைப்படம், ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இதற்க்கு முன்னர்... இப்படத்தில் இருந்து வெளியான, சீன் ஆ... சீன் ஆ... பாடல் மற்றும் வண்ணார பேட்டையில ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் மிஸ்கின் வில்லனாகவும்,  அரசியல்வாதியாகவும் மிரட்டி உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், சரிதா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்திற்கு, விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் சூப்பர் பவரை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories