Madharasi Glimpse Video : விஜய் கொடுத்த துப்பாக்கியா அது? தூள் பறக்கும் சிவகார்த்திகேயனின் மதராஸி கிளிம்ஸ்

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசாக மதராஸி படக்குழு அப்படத்தின் அதிரடி காட்சிகள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளது.

Share this Video

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கு மதராஸி என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வஸந்த் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்படிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் கூடிய மதராஸி படத்தின் மாஸான கிளிம்ஸ் வீடியோவை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர்.

மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் விக்ராந்த், வித்யூத் ஜமால், பிஜு மேனன், ஷபீர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இதன் கிளிம்ப்ஸ் வீடியோ பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி சத்தம் தூள் பறக்குதே, ஒருவேள தளபதி கொடுத்த துப்பாக்கியா இருக்குமோ என கமெண்ட் செய்து வருகின்றனர். மதராஸி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

Related Video