Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்... மாவீரன் படக்குழு வெளியிட்ட மரணமாஸ் பாடல் - வைரலாகும் வீடியோ

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் இருந்து முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

First Published Feb 17, 2023, 12:22 PM IST | Last Updated Feb 17, 2023, 12:22 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். யோகிபாபுவின் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். அவர் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இதுவாகும். இதற்கு முன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து அசத்தி இருந்தார் அதிதி ஷங்கர்.

மாவீரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று மாவீரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான சீன் ஆ சீன் ஆ என்கிற தரலோக்கல் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடி இருக்கிறார். இப்பாடல் வரிகளை கபிலன் மற்றும் லோகேஷ் எழுதி உள்ளனர்.

இப்பாடல் காட்சி சமீபத்தில் சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் படமாக்கப்பட்டது. இதில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடனமாடும் வகையில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். பாடல் செம்ம சூப்பராக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாடல் காட்சியின் ஷூட்டிங் முடிந்தபின்னர், இதில் நடனமாடிய நடனக்கலைஞர்களுக்கும், படக்குழுவினருக்கும் பிரியாணி விருந்து வைத்தாராம் சிவகார்த்திகேயன். இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், இப்பாடல் காட்சி மோகோபாட் என்கிற அதிநவீன கேமரா மூலம் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் இந்த கேமராவை விஜய்யின் பீஸ்ட் மற்றும் கமலின் விக்ரம் படத்திற்கு பயன்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories