ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மாவீரன் படக்குழு - வைரல் வீடியோ

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்து வரும் மாவீரன் படத்தின் குழுவினர் பொங்கல் பண்டிகையை ஜாலியாக கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Share this Video

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று பொங்கல் பண்டிகையையொட்டி மாவீரன் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர், இயக்குனர் மடோன் அஸ்வின் உள்பட மாவீரன் படக்குழுவினர் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பொங்கல் வைத்து ஜாலியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

Related Video