Amaran: உன்னை கண்டு பெருமை கொள்கிறது இந்தியா! முகுந்த் வரதராஜன் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ!

நம் இந்திய தேசத்திற்காக, உயிர் விட்ட மேஜர் முகுந்த் வரதராஜனின் பிறந்தநாளை முன்னுட்டு அவரை நினைவு கூறும் விதமாக, அமரன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 

Share this Video

தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது... இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. 

Related Video