ஜி.வி பிரகாஷின் 700வது பாடல் - SK & சாய் பல்லவி இணையும் "அமரன்" - வெளியான முதல் சிங்கிள்!

Amaran First Single : பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஹே மின்னலே இன்று வெளியாகியுள்ளது.

Share this Video

ஏற்கனவே "ரங்கூன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் தான் "அமரன்". இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்தன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் படத்தில் அவருடைய மனைவியாக சாய் பல்லவி மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். 

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் சிவகார்த்திகேயன் இணையும் முதல் திரைப்படமும் இது தான். இந்த சூழலில் ஜிவி பிரகாஷின் 700 ஆவது பாடலாகவும், அமரன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாகவும் தற்பொழுது வெளியாகி உள்ளது "ஹே மின்னலே" என்கின்ற பாடல். அமரன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாள் சிறப்புரைடமாக திரையரங்குகளில் உலக அளவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video