பிணக்குவியல்.. ரத்த ஆறு.. மிரளவைக்கும் காட்சிகள்.. எதிரியோடு சண்டையிடும் "கங்குவா" - மிரட்டும் டீசர் இதோ!

Kanguva Glimpse : சிறுத்தை சிவா இயக்கத்தில், பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் கங்குவா. அந்த படத்தில் இருந்து Glimpse கட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

Share this Video

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு புதிய கதைகளத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் "கங்குவா". இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் அவர் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

தற்போது அந்த திரைப்படத்திலிருந்து ஒரு Glimpse காட்சி வெளியாகி உள்ளது. இதனை வைத்து பார்க்கும் பொழுது, முன்னொரு காலத்தில் வாழ்ந்த இரு வேறு இன கூட்டங்களுக்கு இடையே ஏற்பட்ட போரை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிகின்றது. இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி சூர்யா பழங்கால பகுதியில் "கங்குவா" என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் திரை வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் தான் கங்குவா. மேலும் இந்த படம் 2 அல்லது 3 பாகங்களாக வெளியாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Video