"நீ என்ன தர்ம தேவதையா?" ஜோதிகாவை தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த சுசித்ரா - ஏன் இந்த கொலவெறி?

Suchitra : பிரபல பாடகி சுசித்ரா, பிரபல நடிகை ஜோதிகா, கங்குவா திரைப்படம் குறித்து பேசிய கருத்துக்களுக்கு கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

First Published Nov 18, 2024, 6:21 PM IST | Last Updated Nov 18, 2024, 6:21 PM IST

சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை எதிர்த்து, அவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார். "நீங்களே கங்குவா திரைப்படம் முதல் பாதி நன்றாக இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் டிக்கெட் வாங்கி விட்டு அனைவரும் 30 நிமிடங்கள் கழித்து தான் திரைப்படம் பார்க்க செல்ல வேண்டுமா?. ஒரு ஆங்கிலத்தில் கூட உனக்கு சரியாக பேச தெரியவில்லை. நீ எப்போது ஒரு திரைப்பட விமர்சகராக மாறினாய்?எப்போது நீதி தேவதை ஆனாய் என்று எனக்கு தெரியவில்லை" என்று நாக்கூசும் வார்த்தைகளில் நடிகை ஜோதிகாவை விமர்சித்து அவர் பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Video Top Stories