
ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படத்திற்கு சிம்பு பாடியுள்ள தில்லுபாரு ராஜா லிரிக்கல் பாடல் வெளியானது!
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள, டீசல் திரைப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் சண்முகம் முத்துசாமி எழுதி - இயக்கியுள்ள திரைப்படம் 'டீசல்'. திபு நினென் தாமஸ் இசையமைத்துள்ள இந்த 'தில்லுபாரு ராஜா' என்கிற பாடல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 70 சதவீதத்திற்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் முதல் முறையாக ஹரிஷ் கல்யாணி ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.