நான் மிதிச்சி மேல வந்தவன்! சிம்பு கேங் ஸ்டாராக கலக்கும் 'பத்து தல' படத்தின் டீசர் வெளியானது..!

நடிகர் சிம்பு கேங் ஸ்டாராக நடித்துள்ள 'பத்து தல' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
 

Share this Video

நடிகர் சிம்பு கேங் ஸ்டாராக நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற முஃப்தி படத்தின், தமிழ் ரீமேக் ஆக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நடிகர் சிம்பு நடிக்க டெரர் கேங் ஸ்டாராகவும், கௌதம் மேனன் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே இ ஞானவேல் ராஜா 'பத்து தல' படத்தை தயாரித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை, சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில்... இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video