மனித நேயத்திற்கே வரும் சோதனை.! பரபரப்பை ஏற்படுத்திய 'கலியுகம்' படத்தின் ட்ரைலர்!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள 'கலியுகம்' படத்தின் டிரைலர் வெளியாகி, படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.
 

Share this Video

இயக்குனர் பிரமோத் சுந்தர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'கலியுகம்'. இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கிஷோர், இனியன் சுப்பிரமணி, ஹரி, அஸ்மல், சந்தோஷ், மணி, ஆர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே எஸ் ராமகிருஷ்ணா மற்றும் கே ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ராமச்சந்திரன் ஆர் கே யு இன்டர்நேஷனல் ஐஎன்சி மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்பது உணவும் - தண்ணீரும்தான். இது இரண்டும் கிடைக்காத பட்சத்தில் மனிதனிடத்தில் மனித நேயம் என்பது இருக்குமா? என்கிற கற்பனை ஓட்டத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. 2064 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? என்கிற ஒரு கற்பனையாகவே இப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. மனிதர்கள் உணவுக்காகவும் - தண்ணீருக்காகவும் போராடும் போராட்டமே இப்படமாக இருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த படத்துக்கு கே ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வின்சன் இசையமைத்துள்ளார் .இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Video