கார் பார்க்கிங் விவகாரத்தில் கைகலப்பு; பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது!
கார் பார்க்கிங் விவகாரத்தில் பிக் பாஸ் பிரபலம் தர்ஷனுக்கும் நீதிபதி ஒருவரின் மகனுக்கும் இடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bigg Boss Tharshan Arrested : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷனுக்கும், உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே கார் பார்க்கிங் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கார் பார்க்கிங் விவகாரத்தில் நீதிபதியின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் லோகேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.