மிரட்டலான இரட்டை வேடம்; ரிலீஸ் தேதியுடன் வெளியானது ராம் சரணின் Game Changer டீசர்!

Game Changer Teaser : ராம் சரண் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Share this Video

பிரபல நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் "கேம் சேஞ்சர்". இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. மாறுபட்ட 2 கதாபாத்திரங்களில் ராம் சரண் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா, நாசர், ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அரசியல் சம்பந்தமான பல விஷயங்கள் இந்த திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Related Video