மாஸ் வீடியோ உடன்... ராம்சரண் உடனான பிரம்மாண்ட படத்தின் டைட்டிலை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

Share this Video

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடித்து வந்த படத்தை தற்காலிகமாக ஆர்.சி.15 என அழைத்து வந்தனர். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராம்சரணின் பிறந்தநாளான இன்று ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஆர்.சி.15 படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படத்திற்கு கேம் சேஞ்சர் என பெயரிட்டு உள்ளனர். முன்னதாக இப்படத்திற்கு சிஇஓ என பெயரிட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கேம் சேஞ்சர் என பெயரிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

கேம் சேஞ்சர் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றி உள்ளனர். அரசியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Related Video