பொண்ணுக ஒடம்ப வித்து சம்பாதிக்குறது தப்பே இல்ல... கள்ளக்காதலுக்கு சர்ச்சை விளக்கம்! வெளியானது பகாசூரன் ட்ரைலர்

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில், வெளியாகியுள்ளது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பகாசூரன்' படத்தின் ட்ரைலர்.
 

First Published Dec 5, 2022, 7:28 PM IST | Last Updated Dec 5, 2022, 7:28 PM IST

இயக்குனர் மோகன் ஜி 'ருத்ரதாண்டவம்' படத்தை தொடர்ந்து இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது ஒரு பக்கம் இருக்க, சர்ச்சைகளையும் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், போன்ற படங்களில் ஆழமான சில உண்மை கருத்துக்களை தைரியமாக பேசிய மோகன் ஜி இந்த படத்திலும், பணத்திற்காக சீரழிக்கப்படும் கல்லூரி மாணவிகள் பற்றியும், பிரச்சனை என வரும் போது... தற்கொலை முடிவை கையில் எடுப்பது குறித்து இதுவரை யாரும் சொல்லாத ஒரு கோணத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதை இந்த ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன், இந்த படத்தில் கதைக்கு பொருந்தி நடித்துள்ளார். அதே போல், இப்படத்தில் ராதாரவி, மேடையில் சிற்றின்பம் குறித்து பேசுவதும், சசி லையா ஆண்கள் மூளையை விற்று சம்பாதிப்பது போல், பெண்கள் உடம்பை விற்று சம்பாதிப்பது தப்பே இல்லை என கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மிகவும் விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.