ஐட்டம் டான்சில்... சமந்தாவை ஓரம் கட்டிய சாயிஷா! கவர்ச்சிக் குத்தாட்டத்தில் 'ராவடி' செய்த ஆர்யா மனைவி! வீடியோ

நடிகர் சிம்பு நடித்துள்ள, 'பத்து தல' படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலான 'ராவடி' பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது
 

First Published Mar 25, 2023, 6:39 PM IST | Last Updated Mar 25, 2023, 10:10 PM IST

இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு அதிரடியான கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. நடிகர் சிவராஜ்குமார் கன்னடத்தில் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த முஃட்டி படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள இந்தப் திரைப்படம், மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

 இந்த படத்தில் ஏ ஜி ஆர் என்கிற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளார். மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் பிரியா பவானி சங்கர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். குறிப்பாக ப்ரியா பவானி சங்கர் சிம்புவின் தங்கை கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர டி.ஜே.அருணாச்சலம், கௌதம் மேனன் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.

இந்த படத்தில் திருமணம் ஆகி குழந்தை பெற்று பெற்ற பின்னர், நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா 'ராவடி' என்கிற ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ள தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த ஐட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.  மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக, கே இ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories