நண்பன் விஜயகாந்த்தை சந்தித்து... கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்த சத்யராஜ் - வைரலாகும் வீடியோ

புத்தாண்டு தினமான நேற்று கேப்டன் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த சத்யராஜ், அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

First Published Jan 2, 2023, 10:45 AM IST | Last Updated Jan 2, 2023, 10:45 AM IST

தமிழ் திரையுலகில் சமகால நடிகர்களாக அறிமுகமாகி, தற்போது 30 ஆண்டுகளைத் தண்டியும் நட்புடன் பழகி வரும் விஜயகாந்தும், சத்யராஜும் நேற்று திடீர் சந்திப்பு மேற்கொண்டனர். புத்தாண்டு தினமான நேற்று கேப்டன் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த சத்யராஜ், அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.

இந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, தங்களது பழைய கால நினைவுகளைப் பற்றி சத்யராஜ் பேசியது காண்போரை நெகிழச் செய்தது. இந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகப்பாண்டியன், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Video Top Stories