பிரேம் ஜி ஹீரோவாக நடித்துள்ள 'சத்திய சோதனை' படத்தின் ட்ரைலர் வெளியானது!

இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ள பிரேம் ஜி, கதையின் நாயகனாக நடித்துள்ள 'சத்திய சோதனை' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா’ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்திய சோதனை'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

இந்த படத்தில் பிரேம் ஜி கதையின் நாயகனாக நடிக்கிறார். எதேர்ச்சியாக போகுற வழியில் கொலை நடந்ததை பற்றி, இவர் தகவல் கூற, போலீசார் இவர் தான் கொலை செய்தார் என பிடித்து வைத்து கொண்டு வளைய வளைய விசாரணை செய்கிறார்கள். கடைசியில் உண்மையான கொலைகாரன் எப்படி சிக்குகிறான் என்பதை காமெடியான கதைக்களத்துடன் கூறியுள்ளது இந்த திரைப்படம். ஜூன் 21 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Video