watch : லெஜண்ட் சரவணனின் அசத்தலான டான்ஸ் உடன் கூடிய ‘கோனே கோமான’ பாடல் வீடியோ இதோ

சரவணன் அருள் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற கோனே கோமானே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Video

தொழிலதிபர் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தி லெஜண்ட். இப்படம் கடந்தாண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தை அண்மையில் ஓடிடியில் ரிலீஸ் செய்தனர். ஓடிடியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக யூடியூப்பில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் தி லெஜண்ட் படத்தில் இடம்பெறும் கோனே கோமானே பாடலின் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. ஜாவத் அலி பாடிய இப்பாடலுக்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். லெஜண்ட் சரவணனின் அசத்தலான நடனத்துடன் பிரம்மாண்ட அரங்கில் படமாக்கப்பட்டுள்ள கோனே கோமானே பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.

Related Video