ஒருவேள சூர்ய வம்சம் பார்ட் 2-வா இருக்குமோ? வைரலாகும் 3BHK டீசர்
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவையானி, சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள 3BHK படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ், தற்போது முதன்முறையாக நடிகர் சித்தார்த் உடன் கூட்டணி அமைத்துள்ள படம் 3BHK. மாவீரன் படத்தை தயாரித்த அருண் விஸ்வா இப்படத்தை தயாரித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் சரத்குமாரும், தேவையானியும் இப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சைத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னையில் மிடில் கிளாஸ் பேமிலி வாழும் நடிகர் சித்தார்த், சொந்த வீடு கட்டுவதே இப்படத்தின் கதையாக இருக்கும் என்பதே டீசர் மூலம் தெரிகிறது.
இப்படத்தில் சித்தார்த்தின் தந்தையாக சரத்குமாரும், அம்மாவாக தேவையானியும் நடித்துள்ளனர். சூர்யவம்சம் படத்துக்கு பின் சுமார் 30 ஆண்டுகள் கழித்து இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளதால், ஒருவேள இது சூர்ய வம்சம் பார்ட் 2-வா இருக்குமோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளதாம்.