
Video: ரெளடி பேபியாக மாறிய ராதிகா... வரலட்சுமியின் திருமண விழாவில் மனைவியுடன் சரத்குமார் ஆடிய வேறலெவல் டான்ஸ்
வரலட்சுமியின் சங்கீத் பங்க்ஷனில் தன்னுடைய மனைவி ராதிகா உடன் சேர்ந்து ரெளடி பேபி பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார் சரத்குமார்.
நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வரலட்சுமி. சினிமாவில் பிசியான நடிகையாக வரலட்சுமிக்கு தற்போது 38 வயது ஆகிறது, இத்தனை ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்த வரலட்சுமி, கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய காதலனை அறிமுகப்படுத்தினர். வரலட்சுமியின் காதலன் நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார்.
இந்த ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதமே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இவர்களது திருமண கொண்டாட்டங்கள் கடந்த சில தினங்களாக களைகட்டி உள்ளன. நேற்று சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் சங்கீத் பங்க்ஷன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இந்த சங்கீத் விழாவில் நடிகை ராதிகா டான்ஸ் ஆடி அசத்தி இருக்கிறார். முதலில் சோலோவாக ஆடிய ராதிகா, பின்னர் நடிகர் சரத்குமார் உடன் சேர்ந்து ரெளடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். ராதிகாவும் சரத்குமாரும் ஜோடியாக ஆடிய போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வரலட்சுமி சரத்குமாரின் சங்கீத் விழாவில் நடிகைகள் திரிஷா, சங்கீதா, மீனா, நடிகர்கள் பிரபுதேவா, பிரபு, சந்தீப் கிஷான், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி என தமிழ் திரையுலகமே படையெடுத்து வந்து கலந்துகொண்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.