இங்க இருந்து நீ வெளியில போகணும்னா கடவுள வேண்டிக்கோ..! 'பரம்பொருள்' படத்தின் ட்ரைலர் வெளியானது!
இயக்குனர் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அமித்தாஷ் நடித்துள்ள 'பரம்பொருள்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
சிலை கடத்தல் குறித்தும், அதற்கு எப்படி பேரம் பேசி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்தும் உருவாகியுள்ள திரைப்படம் பரம்பொருள். இந்த படத்தை அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக அமித்தாஷ் நடிக்க, முக்கிய கீ ரோல் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக காஷ்மிரா நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'போர் தொழில்' படம் போன்றே இந்த படமும் சரத்குமாருக்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என்ற ட்ரைலரை பார்த்து பல ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தை கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.