கண்ணுல ஈரம் படாம காதல தாண்ட முடியாது..! சந்நிதானத்தில் வெரைட்டியான காமெடியில் வெளியான 'கிக்' ட்ரைலர்!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'கிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

Share this Video

காமெடி கலந்த திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் நடிகை தன்யா ஹோப் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ராகினி திரிவேதி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை பிரசாந்த் ராஜ் எழுதி, இயக்கி உள்ளார். ஃபார்சியூன் பிலிம்ஸ் சார்பில் நவீன் ராஜ் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்க, சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் நாகூர் ராமச்சந்திரன் படத்தொகுப்பில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.

காதல் காமெடி ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Video