பப்புக்குள்ள போக பொண்ணுங்க இல்லனா நோ என்ட்ரி இது தான் ஜனநாயகமா? சந்தானத்தின் 'கிக்' பட டீசர் வெளியானது!

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'கிக்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Aug 17, 2023, 11:21 PM IST | Last Updated Aug 17, 2023, 11:21 PM IST

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, வசூலிலும் லாபம் பார்த்தது. இதைத் தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள மற்றொரு படமான 'கிக்' செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் சந்தானத்தின் வழக்கமான காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி உள்ளதை இந்த டீசலில் பார்க்க முடிகிறது. இந்த படத்தை பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கி உள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்க, தம்பி ராமையா, பிரேமானந்தா, கோவை சரளா, மன்சூர் அலிகான், போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

Video Top Stories