watch : டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்காக சந்தானம் ஆடிய ‘பிரெஞ்ச் குத்து’ பாடல் - டிரெண்டாகும் வீடியோ இதோ

எஸ்.பிரேம் குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் இடம்பெறும் பிரெஞ்ச் குத்து பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

Share this Video

சந்தானம் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்று. இப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. அப்படமும் அமோக வரவேற்பை பெற்றது. தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்களையும் ராம்பாலா இயக்கி இருந்தார். இந்நிலையில், தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகம் டிடி ரிட்டர்ன்ஸ் என்கிற பெயரில் தயாராகி உள்ளது.

இப்படத்தை எஸ்.பிரேம் குமார் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார். இப்படத்தில் இருந்து பிரெஞ்ச் குத்து என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கானா முத்து பாடியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் செம்ம டிரெண்டாகி வருகிறது. இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார். இதன் டான்ஸ் ஸ்டெப்புகளும் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ஆக்கிரமித்து உள்ளன.

Related Video