சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மெர்சலான ‘கிஸா 47’ பாட்டு வந்தாச்சு
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான கிஸா பாட்டு ரிலீஸ் ஆகி உள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் டிடி ரிட்டர்ன்ஸ். இப்படத்தின் இரண்டாம் பாகம் டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற பெயரில் உருவாகி இருக்கிறது. இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அஃப்ரோ இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகி உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் பாடலான கிஸா 47 பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் வரிகளை கெளுத்தி எழுதி இருக்கிறார். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக கீதிகா நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆன்ந்த், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், மாறன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பாரத் விக்ரமன் மேற்கொண்டு உள்ளார். இப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது.