சாவு வீட்டை டாவு வீடா ஆக்கிய சந்தானம்! சீரியல் ஹீரோயினுடன் செம்ம கெமிஸ்ட்ரி! வெளியானது 80'ஸ் 'பில்டப்' ட்ரைலர்

சந்தானம், தன்னுடைய வழக்கமான காமெடி பாணியில் கலக்கியுள்ள 80'ஸ் பில்டப் படத்தின் ட்ரைலர் வெளியானது
 

Share this Video

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில், சந்தானம் 80'ஸ் காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் '80'ஸ் பில்டப்' திரைப்படம். இந்த படத்தில், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ் காந்த், கூல் சுரேஷ், சூப்பர்குட் சுப்பிரமணி, தங்கதுரை, கும்கி அஸ்வின், நெபு சாமி, கலைராணி என பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

சந்தானத்துக்கு ஜோடியாக, சன் டிவியில் பூவே உனக்காக சீரியலில் நடித்திருந்த நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பலர் கண்டிப்பாக இப்படம் சந்தானத்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமி நடித்த கடைசி படமாக இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video