Asianet News TamilAsianet News Tamil

அரசியலை பங்கம் செய்யும் சமுத்திரக்கனியின் பப்ளிக் - உருட்டு உருட்டு லிரிக் வீடியோ வெளியீடு!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் பப்ளிக் படத்தின் உருட்டு உருட்டு லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. உன்னை சரணடைந்தேன் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி இந்தப் படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு மாநில் விருது பெற்றார். நாட்டோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, வினோத சித்தம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அஜித் நடித்த துணிவு படத்தில் இவர் நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் வந் த வாத்தி படத்திலும் நடித்திருந்தார். கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரா பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள பப்ளிக் படத்தில் இடம் பெற்றுள்ள உருட்டு உருட்டு லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படம் தமிழக அரசியலை பங்கம் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை இந்தப் பாடலின் லிரிக் வீடியோ மூலமாக அறிய முடிகிறது.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து ரித்விகா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கேகேகே ஆர் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலமாக கேகே ரமேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். செந்தில் கணேஷ் மற்றும் ஜெயமூர்த்தி ஆகியோர் இணைந்த் இந்தப் பாடலை பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

Video Top Stories