விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ் மழையில் சமந்தா! 'குஷி' படத்திலிருந்து வெளியான ஆராத்யா லிரிக்கல் பாடல்!
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்துள்ள 'குஷி' படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஆராத்யா', பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'குஷி' திரைப்படத்தில் இருந்து, இரண்டாவது சிங்கிளான 'ஆராத்யா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பின்னர் ஹீரோ - ஹீரோயின் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை, வெளிப்படுத்தும் விதமாக ரொமான்டிக் லவ் மெலோடி பாடல் வெளியாகியுள்ளது.
இந்த காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி பாடியுள்ளனர்.' நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை...' என்ற மந்திர வரிகளுடன் பாடல் தொடங்குகிறது. அது மெதுவாக நம்மை குஷியின் காதல் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது.
விஜய் தேவாரகொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் உள்ளது. இந்த படத்திற்கு 'ஹிருதயம்' படத்தின் மூலம் பிரபலமான ஹே ஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்துள்ளார். குஷி படத்தை இயக்குநர் சிவ நிர்வாணா தெலுங்கு பாடல்களை எழுத, மதன் கார்க்கி தமிழ் பாடல்களை எழுதி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் 'குஷி' திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, ஜெயராம் சச்சின் கெடகர், சரண்யா பிரதீப், வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.