சுயமாக எடுத்த முடிவால் சமந்தா படும் துயரம்! பாகுபலிகே டஃப் கொடுக்கும் விதத்தில் வெளியான சாகுந்தலம் பட ட்ரைலர்!

நடிகை சமந்தா நடிப்பில், உருவாகி உள்ள சகுந்தலம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

நடிகை சமந்தா முதல் முறையாக புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'சகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ள நிலையில், இப்படத்தை இயக்குனர் குணசேகரன் இயக்கியுள்ளார்.

'சாகுந்தலம்' படத்தை 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளார்.தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம், ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

'சகுந்தலம்' திரைப்படம் மகாபாரதத்தில் இருந்து சகுந்தலா மற்றும் மன்னர் துஷ்யத்தின் காவிய காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. யசோதா படத்தின் வெற்றிக்கு பின்னர் சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மனம் சொல்லும் பேச்சை கேட்டு, மன்னன் திஷ்யத்திடம் தன்னை இழக்கும் சமந்தா, இதன் கர்ம வினையாக, எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

மேலும் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பாகுபலிக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Video