Sabdham Trailer : திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியானது சப்தம் டிரைலர்

அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் சப்தம் திரைப்படத்தின் திகிலூட்டும் டிரைலர் ரிலீஸ் ஆகி வைரலாகி வருகிறது.

Share this Video

ஈரம், வல்லினம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அறிவழகன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் சப்தம். இப்படத்தில் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், சப்தம் படத்தின் மிரட்டலான டிரைலரை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டு உள்ளனர்.

சப்தம் திரைப்படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, ராஜீவ் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 7ஜி சிவா தயாரித்துள்ள இப்படத்திற்கு அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். ஈரம் படத்தில் தண்ணீரை மையமாக வைத்து பயமுறுத்திய இயக்குனர், இப்படத்தில் சத்தத்தை வைத்து பயமுறுத்த உள்ளார்.

Related Video