ரெஜினாவை காதலிக்கும் பள்ளி மாணவன்... பிரபு தேவாவின் உணர்ச்சி பொங்கும் நடிப்பில் வெளியான 'பிளாஷ் பேக்' ட்ரைலர்!
நடிகை ரெஜினா கசாண்ட்ரா மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள, 'பிளாஷ் பேக்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பிரபுதேவா நடித்துள்ள 'பிளாஷ்பேக்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வயதான பெண்ணுடன் காதல் கொள்ளும் பள்ளி மாணவன் பற்றி இப்படம் பேசுகிறது. இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தற்போது, வெளியிட்டுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் ஏற்கனவே கூறிய போது, இது.. காமத்தை பற்றி எடுத்து கூறும் படமாக இருக்கும் என கூறிய போதிலும், அது ஆபாசமாக இருக்காது என தெரிவித்திருந்தார்.
பிரபுதேவா எழுத்தாளராக நடித்துள்ள இந்த படத்தில், ரெஜினா ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் கொடைக்கானல் மற்றும் சென்னையை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, 'டெடி' புகழ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார், சாம் லோகேஷ் எடிட்டராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.