எனக்கு இன்னொரு பெயர் இருக்கு; பாட்ஷா பாணியில் வந்த ரவி மோகன் பட டைட்டில்
டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின் 34-வது திரைப்படத்தை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சட்டசபையில் ரவி மோகன் பேசும் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் பெயர் கராத்தே பாபு என குறிப்பிட்டுள்ளனர்.
இப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் டவ்டே ஜிவால் நாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.